அண்மைய செய்திகள்

recent
-

அதானியின் மன்னார் காற்றாலை திட்டத்திற்கு முழு அனுமதியை வழங்கிய இலங்கை அரசாங்கம்

 மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, குறித்த நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



இந்தியாவின் M/s Adani Green Energy Limited இனால் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 07 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, குறித்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையால் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டது.


குறித்த குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்னலகொன்று கிலோவாற்று மணிக்கு 8.26 சதம் அமெரிக்க டொலரை இறுதிக் கட்டணமாக அங்கீகரிப்பதற்கும், 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை M/s Adani Green Energy SL Limited இற்கு வழங்குவதற்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



அதானியின் மன்னார் காற்றாலை திட்டத்திற்கு முழு அனுமதியை வழங்கிய இலங்கை அரசாங்கம் Reviewed by Author on May 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.