புலனாய்வு துறையினர் என கூறி 20 பவுண் தங்கம் கொள்ளை
காரில் வந்த நபர்கள் தம்மை புலனாய்வுத்துறையினர் என்று கூறி வீட்டிருந்த சுமார் 20 பவுண் நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றறுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் நேற்று பிற்பகல் ஒருமணியவில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட வயோதிப் பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்துள்ளார்.
திரைப்படபாணியில் இடம்பெற்ற மேற்படிச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு உரும்பிராயிலுள்ள வீடொன்றுக்கு நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கார் ஒன்றில் சென்ற இனம்தெரியாத நபர்கள் சிலர் தம்மை புலனாய்வுத்துறையினர் என்று அறிமுகப்படுத்தியதோடு அந்த வீட்டில் தனிமையாக வசித்து வந்த வயோதிபப் பெண்ணிடம் உங்களுடைய வீட்டினை சோதனைக்குட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
புலனாய்வுத்துறையினர் என்பதனால் பயந்துபோன குறித்த வயோதிபப் பெண் வீட்டை சோதனை போட அனுமதித்துள்ளார். இதன்போது அந்த வயோதிப பெண்ணை வீட்டுக்கு வெளியில் விட்டுவிட்டு குறித்த நபர்கள் வீட்டை சல்லடை போட்டுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதன்பின்பு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 பவுண்தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.இருப்பினும் மேற்படிச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புலனாய்வு துறையினர் என கூறி 20 பவுண் தங்கம் கொள்ளை
Reviewed by NEWMANNAR
on
March 24, 2014
Rating:

No comments:
Post a Comment