அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்க இணையத்தில் மும்மொழி அகராதி

இலங்கையில் மும்மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் ஜேர்மனியின் உதவியுடன் இணையத்தில் மும்மொழி அகராதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த மும்மொழி இணைய அகராதியை www.trilingualdictionary.lk என்ற முகவரியில் அணுகலாம். 


 இலங்கையில் மும்மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக ஜேர்மன் அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையின் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் இந்தச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த மும்மொழி அகராதியில் 25,000 இற்கும் மேற்பட்ட சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளதோடு, பயனர்களின் வசதிக்காக இலவசமாகத் தரவிறக்கப்படக் கூடிய கணினி மென்பொருளொன்றும் காணப்படுகின்றது.

 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரை 9.244, மொழிக் கொள்கையினை உரிய விதத்தில் அமுல்படுத்தவும், சிறிய வயதிலிருந்தே சிறுவர்களுக்கு மும்மொழிக் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) கல்வியினை வழங்கவும் பரிந்துரைக்கிறது.
இலங்கையில் மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்க இணையத்தில் மும்மொழி அகராதி Reviewed by NEWMANNAR on July 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.