யாழ்.ஊடகவியலாளர்களை நாளை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு
ஓமந்தை சோதனைச் சாவடியில் யாழ். ஊடகவியலாளர்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களை நாளைய தினம் விசாரணைக்கு வருமாறு ஓமந்தை பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த 25ம் திகதி யாழ்.குடாநாட்டிலிருந்து கொழும்பில் நடைபெறும் ஊடகப் பயிற்சி பட்டறைக்குச் சென்ற 7 பத்திரிகையாளர்கள் வவுனியா- ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து பொய்க்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படையினர் கஞ்சா போதைப் பொருளை வாகனத்தினுள் வைத்தமையினை நேரில் பார்த்த ஊடக வியலாளர்களை நாளைய தினம் காலை 11மணிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் சாட்சிகளான செய்தியாளர்கள், கே.ஹம்சனன், எஸ்.நிதர்ஷன், மற்றும் எஸ்.சொருபன், வி.கஜீபன், சுயாதீன ஊடகவியலாளர் இ.மயுரப்பிரியன், பி.பாஸ்கரன், சுயாதீன ஊடகவியலாளர் பெ.நியூமன், ஆகியோரையே விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஊடகவியலாளர்களை நாளை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:

No comments:
Post a Comment