விண்கல்லின் தாக்கத்தாலேயே டைனோசர் முற்றாக அழிந்தது
விண்கல்லின் தாக்கம் காரணமாகவே பூமியில் டைனோசர் இனம் முற்றாக அழிந்ததாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தாக்கத்தினால் ஏற்பட்ட கடல்மட்ட உயர்வு மற்றும் எரிமலை குமுறல் காரணமாக டைனோசர்களின் பல வகையான இனங்கள் அழிவடைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில மில்லியன் வருடங்களுக்கு பின்னரோ அல்லது முன்னரோ விண்கல்லின் தாக்கம் ஏற்பட்டிருந்தால் டைனோசர் இனம் பூமியில் அழியாமல் இருந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பாரிய துரதிர்ஷ்டம் என டைனோசர்கள் குறித்து ஆய்வு செய்த பிரித்தானியாவின் எடின்பேர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கலாநிதி (Dr Stephen Brusatte) ஸ்டிபன் ப்ரஸேட் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியா அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த டைனோசர்கள் தொடர்பான 11 முன்னணி நிபுணர்கள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விண்கல்லின் தாக்கத்தாலேயே டைனோசர் முற்றாக அழிந்தது
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:

No comments:
Post a Comment