மாவை.சேனாதிராசாவே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் பொருத்தமானவர்-சீ.வி.விக்கினேஸ்வரன்
பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் பொருத்தமானவர். தலைவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்தபடியாக அவரே தமிழரசுக் கட்சியை நீண்டகாலமாக கட்டிவளர்த்த பெருமைக்குரியவர் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் வரவுள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையில் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு மாவை.சேனாதிராசாவே வரவேண்டிவரும், வரக்கூடியவராகவும் உள்ளார்.
இதனை நான் உறுதியாக கூறுகின்றேன். நான் அறிந்தவரையில் கட்சியில் தலைமைகளும் அவ்வாறே கருதுகின்றனர்.
இவ்வாறான கதைகளைப் பரப்புவதன் மூலம் சிலர் கட்சியைச் சிதைக்க எடுக்கும் முயற்சியை முறியடித்து மாவை.சேனாதிராசாவிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றார்.
மாவை.சேனாதிராசாவே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் பொருத்தமானவர்-சீ.வி.விக்கினேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:

No comments:
Post a Comment