அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளிக்கிழமை நல்லூர்க் கந்தன் கொடியேற்றம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்கள் கலாச்சார ஆடைகளை அணிந்து வருமாறு யாழ். மாநகர சபை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூரானின் வருடாந்த திருவிழா ஆரம்பமாக உள்ளது. அதனை முன்னிட்டு இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாக உள்ளது. 

அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. தமிழர்களுடைய கலாச்சாரம் அனைவராலும் விரும்பப்படுவது. அதற்கு என தனிச்சிறப்பும் உண்டு. எனவே விழாக்காலத்தில் வரும் எந்த மதத்தத்தவர்களாக இருந்தாலும் கலாச்சார ஆடைகளை அணிந்து வாருங்கள். குறிப்பாக பெண்கள் தங்களது ஆடைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் களவினை இம்முறையும் குறைத்துக் கொள்ள பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்படுவார்கள் அதேநேரம் ஆலயத்திற்கு வரும் அடியவர்களும் தங்கள் உடமைகளை பாதுகாக்க வேண்டும். 

 மேலும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. பகல் 12 மணியில் இருந்து 2 மணிவரையான காலப்பகுதியிலேயே ஆலய சூழலில் வாகனங்கள் செல்ல முடியும். மற்றைய நேரங்களில் எக்காரணம் கொண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மாற்று பாதைகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை நல்லூர்க் கந்தன் கொடியேற்றம் Reviewed by NEWMANNAR on July 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.