அண்மைய செய்திகள்

recent
-

நல்­லு­ற­வுகள் தொட­ரவேண்டும்,நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்­தி - ஜனா­தி­பதி

ஐக்­கியம் மற்றும் புரிந்­து­ணர்வு கலா­சா­ரத்தில் நாட்டின் முன்­னேற்­றத்­திற்­காக இலங்கை முஸ்லிம் சமூகம் செய்­துள்ள பெறு­ம­தி­யான பங்­க­ளிப்­புக்­களை நாம் இச் சந்­தர்ப்­பத்தில் நினைவு கூரு­வ­துடன் இலங்­கையின் எதிர்­கால முன்­னேற்­றத்­திற்­காக இத்­த­கைய நல்­லு­ற­வுகள் தொட­ரவேண்டும் என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார். 

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

 இன்று ஈதுல் பித்ர் நோன்பு பெரு­நாளைக் கொண்­டாடும் முஸ்லிம் மக்­க­ளுக்கு இந்த வாழ்த்துச் செய்­தியை அனுப்பி வைப்­பதில் பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.இஸ்­லா­மிய பாரம்­ப­ரி­யங்­க­ளுக்கு ஏற்ப ஒரு முக்­கி­ய­மான இஸ்­லா­மியக் கட­மை­யான ஒரு மாத கால நோன்பை நிறை­வேற்­றி­யதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்­லிம்கள் பெருநாள் கொண்­டாட்­டத்தில் உல­கெங்­கி­லு­முள்ள தமது சகோ­தர முஸ்­லிம்­க­ளுடன் இன்று இணைந்து கொள்­கின்­றனர்.

 இது புனித அல்­குர்­ஆ­னி­னதும் இறைத்­தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்­க­ளி­னதும் போத­னை­க­ளுக்­கேற்ப நோன்பு ஆன்­மீக ப் பெறு­மா­னங்கள் மீதான ஆழ்ந்த ஈடு­பாடு தொடர்ச்­சி­யான வணக்க வழி­பா­டுகள், தியா­கங்கள் போன்ற சம­யக்­க­ட­மை­களில் ஈடு­பட்­டதைத் தொடர்ந்து புத்­து­ணர்ச்­சி­யுடன் மகிழ்­வுறும் சந்­தர்ப்­ப­மாகும். 

 இலங்­கைவாழ் முஸ்­லிம்கள் பல நூற்­றாண்­டு­க­ளாக எமது நாட்டின் ஏனைய இனங்கள் மற்றும் சம­யங்­களைச் சேர்ந்த மக்­க­ளுடன் மிகவும் ஐக்­கி­ய­மாக வாழ்ந்து கடந்த காலங்­க­ளிலும் இந்த வணக்க வழி­பா­டு­களில் ஈடு­பட்டு வந்­துள்­ளனர். நாட்டில் இன்று நிலவும் அமை­தி­யான சூழ்­நிலை அவர்­க­ளது சமய நட­வ­டிக்­கை­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­துள்­ள­துடன் சமூ­கத்தின் முன்­னேற்­றத்­திற்கும் நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் உதவும் வகையில் இந்த நிலைமை மேலும் பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

ஐக்­கியம் மற்றும் புரிந்­து­ணர்வு கலா­சா­ரத்தில் நாட்டின் முன்­னேற்­றத்­திற்­காக இலங்கை முஸ்லிம் சமூகம் செய்­தள்ள பெறு­ம­தி­யான பங்­க­ளிப்­புக்­களை நாம் இச்­சந்­தர்ப்­பத்தில் நினைவு கூருவதுடன் இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இத்தகைய நல்லுறவுகள் தொடர வேண்டுமென்றும் எதிர்பார்க்கின்றோம்.
நல்­லு­ற­வுகள் தொட­ரவேண்டும்,நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்­தி - ஜனா­தி­பதி Reviewed by NEWMANNAR on July 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.