காஸாவில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னரும் மோதல்
ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ள 24 மணித்தியால யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதாரிகளும் இஸ்ரேலும் தமது தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
யுத்த நிறுத்ததை கடைப்பிடிக்க தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
ஹமாஸ் இயக்கத்தின் யுத்த நிறுத்த அறிவிப்பை நிராகரித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜாமின் நெட்டன்யாஹு தமது மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.
இரு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக 1030க்கும் அதிகமான பலஸ்தீனியர்களும் 45 இஸ்ரேலியர்களும் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னரும் மோதல்
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:

No comments:
Post a Comment