நிலநடுக்கத்தால் சீனாவில் உருவான திடீர் ஏரியால் அச்சம்
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான திடீர் ஏரியால், அப்பகுதி மக்களை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர் நிலச்சரிவால் மீட்புப் பணிகள் தாமதமாவதாக கூறப்பட்டுள்ளது.
சீனாவின் தென் மேற்குப் பகுதியில் யுனான் மாகாணம் உள்ளது.
இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 398 பேர் பலியாகினர்.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் ஜியான் பியான் கிராமத்தில் திடீர் ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மீட்டர் உயரம் என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இதனால் அப்பகுதியே ஏரியினுள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதி மக்களை, மீட்புப் படையினர் வேகமாக வெளியேற்றி வருகின்றனர்.
இதே பகுதியில் 7 மின் நிலையங்கள் உள்ளதால் அவை அனைத்தும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக ஜிங்குவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் சீனாவில் உருவான திடீர் ஏரியால் அச்சம்
Reviewed by NEWMANNAR
on
August 05, 2014
Rating:

No comments:
Post a Comment