ஆயர் தலைமையிலான தமிழ் சிவில் சமூக வலையமைப்பு தமிழ் சிவில் சமூக அமையம் எனும் பெயரில் மாற்று வடிவம் பெற்றுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பல்வேறு வழிகளில் குரல் கொடுத்து வந்த மன்னார் ஆயர் தலைமையிலான தமிழ் சிவில் சமூக வலையமைப்பு தமிழ் சிவில் சமூக அமையம் எனும் பெயரில் மாற்று வடிவம் பெற்றுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இவ் அமையத்தின் வருடாந்த ஒன்றுகூடலில் அமையத்தின் கொள்கை ஆவணமும் யாப்பும் ஒன்று கூடலில் பங்குபற்றியிருந்த 60இற்கும் மேற்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் அமையத்தின் நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது. அதன்படி மன்னார் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் அழைப்பாளராகவும் பொ.ந.சிங்கம் தியாகராஜன் ராஜன் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் குமாரவடிவேல் குருபரன் எழில் ராஜன் பேச்சாளர்களாகவும் பேராசிரியர் வி.பி. சிவநாதன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான அமையத்தின் இணைப்பாளர்களும் வடக்குக் கிழக்கிற்கு வெளியேயான மாவட்டங்களுக்கான ஓர் இணைப்பாளரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது மாவட்ட ரீதியாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு பொருத்தமான வேலைத்திட்டங்களும் அடையாளம் காணப்பட்டன.
ஆயர் தலைமையிலான தமிழ் சிவில் சமூக வலையமைப்பு தமிழ் சிவில் சமூக அமையம் எனும் பெயரில் மாற்று வடிவம் பெற்றுள்ளது.
Reviewed by NEWMANNAR
on
November 25, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 25, 2014
Rating:


No comments:
Post a Comment