போலி துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் மீது அமெரிக்க பொலிஸார் சூடு
அமெரிக்காவில் கிளேவ்லாண்ட் நகரிலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் போலி துப்பாக்கியுடன் விளையாடிய 12 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.தாமிர் ரைஸ் என்ற மேற்படி சிறுவன் விளையாட்டு மைதானத்தில் விளையாடிய வேளை, தனது கையில் இருந்த விளையாட்டுத்துப்பாக்கியை ஏனையவர்களை குறிபார்ப்பது போன்று தூக்கிப்பிடித்துள்ளான்.
இந்நிலையில் தாமிர் ரைஸ்ஸின் கரத்தில் நிஜ துப்பாக்கி இருப்பதாக தவறதாக கருதிய ஒருவர் பொலிஸாருக்கு அது தொடர்பில் அறிவிக்கவும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தாமிர் மீது இரு தடவைகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதன் போது ஒரு துப்பாக்கி ரவை தாமிரின் வயிற்றை துளைத்துச் சென்றுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட தாமிர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளான்.
மேற்படி, துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் உள்ளூர் பொலிஸ் படையில் ஒரு வருடத்திற்கு முன்பே இணைந்துள்ளார். ஏனையவர்கள் பொலிஸ் துறையில் 10 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டவர்களாவர்.
போலி துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் மீது அமெரிக்க பொலிஸார் சூடு
Reviewed by NEWMANNAR
on
November 25, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 25, 2014
Rating:


No comments:
Post a Comment