மன்னாரில் பெரிய வெங்காய செய்கையை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு விதைகள் வழங்கி வைப்பு-Photos
மன்னார் மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரிய வெங்காய செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு பெரிய வெங்காய விதைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(21) காலை மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட அருகங்குன்று கிராமத்தில் இடம் பெற்றது.
யு.எஸ்.ஏ.ஐ.டி அமைப்பின் நிதியுதவியுடன் விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் குறித்த பெரிய வெங்காய விதைகள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 370 விவசாயிகளுக்கு குறித்த பெரிய வெக்காய விதைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக விவசாய பிரதி அமைச்சர் வை.ஜி.பத்மசிறி,சிறப்பு விருந்தினராக யு.எஸ்.ஏ.ஐ.டி அமைப்பின் இலங்கைக்கான உதவிப்பணிப்பாளர் தோமஸ் போமா,அமைச்சர் றிஸாட் பதியுதீனின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர், மற்றும் வடமாகாண திவிநெகும திட்ட பணிப்பாளர் அனுர வீர ரட்ண உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,விவசாயிகள் என பலர் கலத்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் நூறு ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய வெங்காய செய்கையை மேற்கொண்டு ஆயிரம் டொன் பெரிய வெய்காய உற்பத்தியை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் என விவசாய பிரதி அமைச்சர் வை.ஜி.பத்மசிறி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பெரிய வெங்காய விதைகள் வழங்கப்பட்டதோடு,உபகரணங்களும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அக்கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவருடைய விவசாய காணியில் பெரிய வெங்காய விதைகள் வைபவ ரீதியாக நாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இராசமடு கிராமத்தில் உள்ள தனி நபர் ஒருவருடைய தோட்டத்திற்கு சென்ற பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மரக்கறி செய்கையினை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பெரிய வெங்காய செய்கையை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு விதைகள் வழங்கி வைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
November 21, 2014
Rating:

No comments:
Post a Comment