பிலிப் ஹியூஸ் இறுதி சடங்கு: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 26 வயது பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ், சிட்னியில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது, அபோட் வீசிய பவுன்சர் பந்து தலையில் பயங்கரமாக தாக்கியதில் கடந்த 27 ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நிலைகுலைந்து போயினர்.
மறைந்த வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான வடக்கு நியூசவுத்வேல்ஸ் மாகாணம் மாக்ஸ்வில்லே நகரில் உள்ள பள்ளியில் தற்போது நடந்து வருகிறது. இறுதிச்சடங்கில், ஆஸ்திரேலிய பெண்கள் அணியினர், நியூ சவுத்வேல்ஸ் அணியினரும் தங்களது கண்ணீரை காணிக்கையாக்கினார்கள்.
இதேபோல், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், ரிக்கிபாண்டிங், மேத்யூ ஹைடன், மெக்ராத், ஸ்டீவ் வாக், ஷேன் வார்னே, மைக் ஹஸ்சி உள்ளிட்ட ஏராளமான முன்னாள் வீரர்களும் மாக்ஸ்வில்லே நகருக்கு வந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தரப்பில் தற்காலிக கேப்டன் விராட் கோலி, முரளிவிஜய், ரோகித் ஷர்மா மற்றும் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி, பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், அணி மேலாளர் அர்ஷாட் அயூப் ஆகியோர் ஹியூக்சின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேபோல், பிலிப் ஹியூஸ் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிலிப் ஹியூஸ் இறுதி சடங்கு: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!
Reviewed by NEWMANNAR
on
December 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 03, 2014
Rating:
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment