அண்மைய செய்திகள்

recent
-

மூன்றாம் தவணை விடுமுறைக்காக 5ஆம் திகதி மூடப்படுகிறது அரச பாடசாலை

அரச பாடசாலைகள் அடுத்த வருடம் தை மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளது.

2015 ஆம் கல்வி ஆண்டுக்காக நாட்டிலுள்ள அனைத்து தமிழ், சிங்களப் பாடசாலைகளும் முதலாம் தவணைக்காக ஜனவரி 5ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை இயங்கவுள்ளது.


ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதலாந்தவணை விடுமுறைக்கென மூடப்படும் குறித்த பாடசாலைகள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஜூலை மாதம்30 ஆம் திகதி வியாழக்கிழமை வரை இரண்டாந் தவணைக்கல்வி செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதோடு ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறைக்கென மூடப்பட்டு மூன்றாம் தவணைக்கல்வி நடவடிக்கைகளுக்காக ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை இயங்கவுள்ளது.

இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் முதலாம் தவணைக்காக ஜனவரி ஐந்தாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை இயங்கவுள்ளது.
இரண்டாம்தவணைக்கல்வி நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறும். ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 18 ஆம் திகதி வரை ஒரு கட்டமாகவும் ஜூலை மாதம் 21ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 26 திகதி வரை மற்றொரு கட்டமாகவும் இடம்பெறும்.

புனித ரமழான் கால விடுமுறை அடுத்த வருடம் ஜூன் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை 20 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் டிசம்பர் 04 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
மூன்றாம் தவணை விடுமுறைக்காக 5ஆம் திகதி மூடப்படுகிறது அரச பாடசாலை Reviewed by NEWMANNAR on December 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.