மக்களைக் குழப்பும் வகையில் அரசினால் போலிப் பிரச்சாரங்கள்! மக்களே அவதானம்: சீ.வீ.கே.சிவஞானம்
வட மாகாண மக்களை குழப்பும் வகையில் அரச தரப்பினால் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் வட மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக அரச தரப்பினால் மக்களை குழப்பும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் மாதிரி வாக்கு சீட்டுகள் என்பன விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலாக மக்களை குழப்பும் வகையில் மைத்திரிபால சிறிசேனாவின் அன்னப்பறவை சின்னத்துக்கு பதிலாக முச்சக்கர வண்டி சின்னத்தை பதிலீடு செய்து விநியோகித்து வருகின்றனர். இதனால் மக்களை ஏமாராது அவதானமாக இருக்குமாறு கேட்டு கொள்கிறோம் என சி வி கே சிவஞானம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களைக் குழப்பும் வகையில் அரசினால் போலிப் பிரச்சாரங்கள்! மக்களே அவதானம்: சீ.வீ.கே.சிவஞானம்
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:


No comments:
Post a Comment