வன்முறை தொடர்ந்தால் மறுவாக்குப்பதிவு: தேசப்பிரிய எச்சரிக்கை
தேர்தல் வன்முறைகள் தொடருமானால் தாம் மறுவாக்கு பதிவுக்கு உத்தரவிடவேண்டியேற்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளார்
கடந்த சில தினங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் குறித்து கருத்துரைக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இவ்வாறான வன்முறைகள் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள் என்று மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்களை அச்சுறுத்தல் வாக்காளர்களை தடுத்தல் வாக்குசீட்டுகளை சேகரித்தல் போன்ற சம்பவங்கள் தேர்தல் மீறல் செயல்களாகும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்புக்களின் போது இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். பொலிஸாரே முழுமையாக கடமைகளில் ஈடுபடுவர் என்றும் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வன்முறை தொடர்ந்தால் மறுவாக்குப்பதிவு: தேசப்பிரிய எச்சரிக்கை
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:


No comments:
Post a Comment