அண்மைய செய்திகள்

recent
-

ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையிலேயே வாக்களித்து விடுங்கள்: மனோ கணேசன் வேண்டுகோள்


காலை ஏழு மணிக்கும் முற்பகல் பத்து மணிக்கும் இடையில், உங்கள் அடையாள அட்டை அல்லது ஏற்றுகொள்ளப்பட்டுள்ள அடையாள ஆவணத்தை எடுத்து சென்று வாக்களியுங்கள்.

வாக்களிப்பு தொடங்கிய முதல் மூன்று மணித்தியாலங்களுக்குள் வாக்களிப்பதன் மூலம் உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதில் நீங்கள் எதிர்நோக்க கூடிய தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக்கொள்ளலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனம் தெரிவித்துள்ளார்.

நாளைய வாக்களிப்பு தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, வாக்குரிமை உங்கள் ஜனநாயக ஆயுதம். வாக்களிப்பது உங்கள் உரிமை. இந்த உரிமையை முழுமையாக பயன்படுத்துங்கள்.

வாக்களிப்பு தொடங்கிய முதல் மூன்று மணித்தியாலங்களுக்குள் வாக்களிப்பதுடன் கீழ்க்கண்ட மூன்று முக்கிய விடயங்களை மனதில் கொள்ளுங்கள். முதலாவது, தபால் மூலம் உங்களுக்கு வாக்காளர் அட்டை கிடைத்து இருந்தால் அதையும் வாக்களிப்பு நிலையத்துக்கு எடுத்து செல்லுங்கள்.

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள், உங்கள் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தினால் கட்டாயமாக வாக்களிக்க முடியும். வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை கட்டாயம் அல்ல.

உங்கள் அடையாமே கட்டாயம் ஆகும். இரண்டாவது, இந்த தேர்தலில் மொத்தம் பத்தொன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஒருவருக்கு மாத்திரம் நீங்கள் வாக்களிப்பதாயின், அவரது பெயருக்கு பக்கத்தே உள்ள அவரது சின்னத்துக்கு அருகில் புள்ளடி இடுவதன் மூலம் உங்கள் கடமையை நிறைவேற்றலாம்.

மூன்றாவது, இந்த தேர்தலில் விருப்பு வாக்குகளை அளிப்பது கட்டாயம் அல்ல. ஆனாலும் நீங்கள் விருப்பு வாக்குகளை அளிக்க விரும்பினால், அதிகபட்சமாக மூன்று வேட்பாளர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளை அளிக்கலாம்.

இந்த விருப்பு வாக்குகளை, உங்கள் விருப்பு வரிசை தெரிவுக்கு ஏற்ப மூன்று வேட்பாளர்களின் சின்னங்களுக்கு அருகில் 1, 2, 3, என்ற இலக்கங்களை இடுவதன் மூலம் உங்கள் கடமையை நிறைவேற்றலாம்.


ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையிலேயே வாக்களித்து விடுங்கள்: மனோ கணேசன் வேண்டுகோள் Reviewed by NEWMANNAR on January 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.