அண்மைய செய்திகள்

recent
-

இன்று சர்வதேச ஒட்டிசம் தினம்


நாட்டில் “93 சிறார்களில் ஒருவர்” ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கடந்த 10 வருடங்களில் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், சிறுவர் நோய்கள் குறித்த விசேட வைத்தியருமான டொக்டர் சமன்மலி சுமனசேன கூறினார்.

இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஒட்டிசம் தினத்தை முன்னிட்டு, ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறார்களை அடையாளங் காணுதல் மற்றும் அவர்களுக்கான செயற்றிட்டங்கள் சில முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒட்டிசம் நோயால் பாதிக்கப்படும் சிறார்களுக்கு தாமதமின்றி சிகிச்சை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள முடியுமென டொக்டர் சமன்மலி சுமனசேன மேலும் கூறினார்.
இன்று சர்வதேச ஒட்டிசம் தினம் Reviewed by NEWMANNAR on April 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.