சர்வதேச சட்டத்தை மீறி மரணதண்டனை வழங்கும் இலங்கை: சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு
சர்வதேச சட்டத்திட்டங்களை மீறி குற்றவாளிகளுக்கு இலங்கை அரசாங்கம் மரண தண்டனை வழங்கி வருகின்றது என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.
2014ம் ஆண்டு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான 76 பக்கம் கொண்ட அறிக்கை இச்சபையினால் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின்படி இலங்கை அரசாங்கம் சிறுவர்களுக்கும், பாரதூரமான குற்றங்களில் ஈடுபடாதவர்களுக்கும் மரண தண்டனை விதித்துள்ளது. அத்துடன் இதுவரை 61ற்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபையின் வருடாந்த அறிக்கையின்படி இலங்கை அரசாங்கம் கடந்தாண்டு மோசமான மரண தண்டனை விதிக்கும் ஆசிய நாடுகளின் வரிசையில் நான்காவது இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவயதில் இழைத்த குற்றமொன்றுக்காக கடந்த ஆண்டு இலங்கை அரசாங்கம் ஒருவருக்கு மரண தண்டனை விதித்தமையும் குறித்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகில் இலங்கையை தவிர மேலும் இரு நாடுகள் சிறுவயதில் செய் குற்றத்திற்காக கடந்தாண்டு மரண தண்டனை விதித்ததாகவும், இது சிறுவர்களின் அடிப்படை உரிமை மீறல் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் 695 மரண தண்டனைகளை விதித்த முதல் 17 ஆசிய பசுபிக் நாடுகளின் வரிசையில் இலங்கை 14வது இடத்தையும், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சட்டத்தை மீறி மரணதண்டனை வழங்கும் இலங்கை: சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு
Reviewed by NEWMANNAR
on
April 02, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 02, 2015
Rating:


No comments:
Post a Comment