அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அக­திகள் 65 பேர் நாளை நாடு திரும்­பு­கின்­றனர்


யுத்தம் காரா­ண­மாக நாட்டை விட்டு இந்­தி­யா­விற்கு அக­தி­க­ளாகத் தஞ்சம் புகுந்­த­வர்­களில் 65 பேர் நாளை புதன்­கி­ழமை நாடு திரும்­ப­வுள்­ள­தாக மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சு அறி­வித்­துள்­ளது. இந்த 65 இலங்­கை­யர்­களும் நாளை காலை கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டை­ய­வுள்­ளனர். இவர்­களை மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம் சுவா­மி­நாதன் வர­வேற்­க­வுள்ளார். இது தொடர்பில் மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ள­ தா­வது, 30 வரு­ட­கா­ல­மாக நாட்டில் இடம்­பெற்று வந்த யுத்தம் கார­ண­மாக தமது சொந்த இட ங்­களை விட்டு இலட்­சக்­க­ணக்­கான மக்கள் வெளிநா­டு­களில் தஞ்சம் புகுந்­தனர். இவர்­களில் அண்­டைய உறவு நாடான இந்­தி­யா வில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் அக­தி­க­ளாக வசித்துவரு­கின்­றனர். தற்­போது நாட்டில் அமை­தி­யான சூழல் உரு­வா­கி­யுள்ள நிலையில் இந்­தி­யாவில் அக­தி­க­ளாக வாழ்ந்­த­வர்­களில் பலர் தமது சொந்த இடங்­க­ளுக்குத் திரும்பி குடி­யே­று­வ­ தற்கு விருப்பம் கொண்­டுள்­ளனர். இருந்த போதிலும் முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் அதற்­கான சாத­க­மான நிலைமை காணப்­ப­ட­ வில்லை. இந்­நி­லையில் புதிய அர­சாங்கம் ஆட்­சிப்­பீடம் வந்த பின்னர் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­ன்றன. இதற்­க­மைய இந்­தி­யாவில் அக­தி­க­ளாக வசித்துவந்த 65 இலங்­கையர்கள் நாளை புதன்கிழ­மை­ நாடுதிரும்பி தமது சொந்த இடங்­களில் மீளக்குடி­யே­ற­வுள்­ளனர். மேற்­படி நாடுதிரும்­ப­வுள்ள 65 பேரும் நாளை காலை கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டை­ய­வுள்­ளனர். இவர்­களை மீள்­கு­டி­யேற்றம்இ புனர்­நிர்­மாணம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் வர­வேற்­க­வுள்ளார்.

இலங்கை அக­திகள் 65 பேர் நாளை நாடு திரும்­பு­கின்­றனர் Reviewed by Author on May 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.