இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு அனுமதி...
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் நீண்டகாலமாக பேசபட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் இரு ஆண்டுகளில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் பின்னர் இலங்கையிலுள்ள அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்கவும் முடியும் எனவும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு அனுமதி...
Reviewed by Author
on
October 11, 2015
Rating:

No comments:
Post a Comment