அண்மைய செய்திகள்

recent
-

அம்பாறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகளை ஆயர் கிரிஸ்டியன் சந்தித்தார்!...


வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் உண்ணா விரதப்போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில் இன்று மாலை 4.00 மணியளவில் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய கிரிஸ்டியன் நோயல் இம்மானுவல் மற்றும் ரொமன் கத்தோலிக்க அருட் தந்தையர்களும் குறித்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களை நேரில் பார்வையிட்டனர்.

இச்சந்திப்பின்போது, பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

மத்திய அரசிடம் இருந்து பதிலை எதிர்பார்த்த வண்ணம் இப்போராட்டத்தில் ஈடுபடுகின்ற பட்டதாரிகள் தமக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெறும் வரை இப்போராட்டத்தினை கைவிடப் போவதில்லையென உறுதியாக தெரிவித்தவண்ணம் வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவினையும் எதிர்பார்த்து நிற்கிறனர்.

அம்பாறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகளை ஆயர் கிரிஸ்டியன் சந்தித்தார்!... Reviewed by Author on October 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.