மன்னார் பாடசாலைகளில் சிறப்பாக இடம் பெற்ற 'கால்கோள் விழா' - படங்கள் இணைப்பு
இவ்வருடம் தரம் 1 இல் புதிதாக அனுமதி பெற்றுள்ள மாணவர்களை வைபவ ரீதியான வரவேற்கும் 'கால் கோள் விழா' இன்று வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் சிறப்பாக இடம் பெற்றது.
அந்த வகையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையிலும் குறித்த 'கால் கோள் விழா' சிறப்பாக இடம் பெற்றது.
பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ஜோசப் ஒகஸ்ரின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்கப்பட்டதோடு இவ்வருடம் தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவர்கள் புதிதாக இவ்வருடம் தரம் 1 இல் கல்வி கற்க வந்துள்ள மாணவர்களை மலர் சென்டு மற்றும் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பாடசாலை பிரதான மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர் மற்றும் சர்வமதத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மன்னார் பாடசாலைகளில் சிறப்பாக இடம் பெற்ற 'கால்கோள் விழா' - படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
January 14, 2016
Rating:
No comments:
Post a Comment