கூகுளின் ஒருநிமிட உரிமையாளர்!
கூகுள்.காம் இணையதளத்திற்கு ஒரு நிமிட உரிமையாளராக இருந்த நபருக்கு அந்நிறுவனம் ரூ. 8 லட்சத்தை வழங்கியுள்ளது.
குஜராத்தின் மந்த்வி பகுதியை சேர்ந்தவர் சான்மே வேத், அமெரிக்காவில் எம்பிஏ படித்து வருகிறார்.
இவருக்கு இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் உள்ளது, அதன்படி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஓன்லைனில் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது ‘கூகுள்.காம் விற்பனைக்கு’ என்று இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.
தொடர்ந்து கிரெடிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தி 12 டொலருக்கு வாங்கினார்.
ஒரு நிமிடம் கழித்து கூகுள் டொமைன்ஸ் ஒரு தகவல் அனுப்பியது. அதில், ‘சான்மே வேத்தின் ஆர்டர் ரத்து செய்யப்படுகிறது. அந்த முகவரி ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து வேத் தன்னுடைய LinkedIn பக்கத்தில், தொழில்நுட்ப கோளாறு இருந்திருக்கலாம். அதனால் நான் கேட்டதும் கூகுள்.காம் எனக்கு விற்கப்பட்டிருக்கலாம். கூகுள் முகவரியை அந்த நிறுவனம் புதுப்பிக்கவும் தவறியிருக்கலாம்’’ என்று அவர் கூறிள்ளார்.
இதற்கிடையே ஒரு நிமிட உரிமையாளராக இருந்த சான்மே வேத்துக்கு ரூ.8 லட்சம் பரிசாக கூகுள் வழங்கியுள்ளது.
இந்த தொகையை இந்தியாவில் 18 மாநிலங்களில் 404 இலவச பள்ளிகளை நடத்தி வரும் ‘ஆர்ட் ஆப் லிவிங்’ அறக்கட்டளைக்கு வழங்குவதாக வேத் கூறியுள்ளார்.
கூகுளின் ஒருநிமிட உரிமையாளர்!
Reviewed by Author
on
February 01, 2016
Rating:

No comments:
Post a Comment