மன்னார் துரையம்மா அன்பகமானது ஸ்ரீ முத்து மாரியம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான,,,,,..முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் மண்ணில் கல்விக்காக தனது பணியினை மேற்கொள்ளும் துரையம்மா அன்பகமானது தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக கடந்த 06-03-2016 அன்று பேசாலைக்கிராமத்தில் இருக்கின்ற அறநெறிப்பாடசாலைகள் மறைக்கல்வி வகுப்புக்கள் மதராஸ பள்ளியில் நடைபெறும் வகுப்புக்களை சென்று பார்வையிட்ட வேளை ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்ட தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை காலை பேசாலைக்கிராமத்திற்கு துரையம்மா அன்பகத்தினர் விஜயத்தினை மேற்கொண்டனர்…
அன்னை வேளாங்கன்னி மறைக்கல்வி நிலைறத்திற்கும்
இந்து முன்னணி அறநெறிப்பாடசாலை
காட்டாஸ்பத்திரி பள்ளி வாசல் மதரஸா வகுப்பிற்கும்
எபிநேசர் தேவசபை மறைக்கல்வி நிலையத்திற்கும்
ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலைக்கும்
நேரில் சென்று மாணவர்களின் தேவைகள் அறிந்து கொண்டதோடு அந்தந்த மதகுருமார்கள் மறையாசிரியர்கள் மௌலவிமார்களுடன் கடந்துரையாடி ஆன்மிகத்திலும் ஒழுக்கத்திலம் கல்வியிலும் மாணவர்கள் முன்னேற வேண்டும் அதற்கான தனது சேவைய தொடர்ந்து செய்யும் துரையம்மா அன்பகம் என்றார் அத்தோடு ஸ்ரீ முத்து மாரியம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தரைவிரிப்பும்(பாய்) பிளாஸ்ரிக் வாளி -ஜக்குகள் -சில்வர்கள் என்பன துரையம்மா அன்பகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
பேசாலைக்கிராமத்தில் இருந்து மாணவர்களை கல்விக்காகவும் உள்வாங்கவுள்ளதாக அதன் தலைவர் வே.மனுவேல்பிள்ளை தெரிவித்தார் அவர்களுடன் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் செயளாலர் பொருளாலர் கலந்து கொண்டனர்.
மன்னார் துரையம்மா அன்பகமானது ஸ்ரீ முத்து மாரியம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான,,,,,..முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
March 14, 2016
Rating:

No comments:
Post a Comment