அண்மைய செய்திகள்

recent
-

பாதாள உலக தலைமை பதவிக்காக மோதல்! தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார்


பாதாள உலக குழுவின் தலைவராகுவதற்கு அதனுடன் தொடர்புடையவர்கள் முக்கோண சண்டையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதென, சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு குற்ற செயல்களுக்காகவே அவர்கள் இவ்வாறு தலைமை பதவிக்கு சண்டையிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் மூன்று குழுவினருடன் தொடர்புடைய 40 பேரை தேடும் பணியில் பொலிஸ் விசேட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று பாதாள குழுக்களின் ஒரு குழுவின் தலைமைப் பதவியை தனுஷ்க லக்மின என்பவரின் கீழும் இரண்டாவது குழு தெமட்டகொட சமிந்தவின் கீழும் மூன்றாவது குழு சமயன் மற்றும் ஆமிசம்பத் என்பவரின் கீழும் செயற்படுத்தப்படுவதாக, பாதாள குழு தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த பாதாள குழுக்களுக்கு தொடர்புடைய உறுப்பினர்கள் சிலர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதன் பின்னர் வெளியிட்ட தகவல்களில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக பாதாள குழுக்கள் மூன்றிற்கு ஆதரவு வழங்குவதற்கு 30 பேர் உள்ளதாகவும். ஒரு குழுவிற்கு 10 பேர் என்ற ரீதியில் தொடர்புபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் கண்கானிப்பின் கீழ பொலிஸ் பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாள குழுக்களின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சொகுசு வாகனங்கள் வழங்குபவர்களை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்படுகின்ற சுற்றுவளைப்புகளில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த வாரம் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதாள உலக தலைமை பதவிக்காக மோதல்! தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார் Reviewed by NEWMANNAR on April 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.