யாழ் மாவட்டத்தில் இடம் பெறும் அசம்பாவிதங்கள் குறித்த பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பொலிஸ் மா அதிபருக்கு செல்வம் எம்.பி கடிதம்.
யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் அண்மைக்காலங்களாக இடம் பெற்று வருகின்ற அசம்பாவிதங்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் இயல்பு நிலை பாதீக்காத வகையில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,,
கடந்த சில தினங்களாக யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம் பெற்று வருகின்ற வண்செயலகளின் காரணமாக மக்கள் பாதீப்படைந்துள்ளனர்.குறித்த சம்பவங்கள் எனக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இடம் பெறுகின்ற சம்பவங்கள் குறித்து பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வண்முறைச்சம்பவங்கள் அதிகலவில் இரவு நேரங்களில் அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்து சமாதனத்தையும்,சக வாழ்வையும் சீர் குழைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் குறித்த சம்பவங்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இதற்கு பொலிஸார் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வேண்டும்.என பொலிஸ்மா அதிபரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் இடம் பெறும் அசம்பாவிதங்கள் குறித்த பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பொலிஸ் மா அதிபருக்கு செல்வம் எம்.பி கடிதம்.
Reviewed by NEWMANNAR
on
April 26, 2016
Rating:

No comments:
Post a Comment