மன்னார் மாவட்ட சர்வமத பேரவையின் தலைவராக மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு.
மன்னார் மாவட்ட சர்வமத பேரவையின் பொதுக்கூட்ட நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது .இக் கூட்டத்தில் சர்வ மதம் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த தோடு புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
சர்வ மத பேரவையின் புதிய தலைவராக மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு செய்யப்பட்டார்.
பொதுச் செயலாளராக எஸ்.ஏ. பெர்னாண்டோ,பொருளாளராக .எஸ் .செசாரியஸ்,உப தலைவர்களாக அருட்பணி எமில் எழில் ராஜ் அடிகளார், ஜனாப் எஸ்.ஏ. அஸீம் மௌலவி,பாஸ்டர் எஸ்.பத்திநாதன்,சாந்திபுர விகாராதிபதி ஆகியோரும்
உப செயலாளராக ஜனாப் கே.எம். நஜீம் , நிர்வாக உறுப்பினர்களாக ஜனாப் எம்.எம்.சபூர் தீன் ,எஸ்.எஸ். இராம கிருஷ்ணன்,ஜனாப் எஸ்.எச்.எம். சிஹார் செல்வி சாந்தி கஸ்மீர்,திரு.வி.செல்வ குமரன்,திரு.ம.நடேசானந்தன்,அருட்சகோதரி ரீட்டா குணநாயகம்,ஜனாப் ரசாக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment