அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை! 30,000 இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கில்


2017ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 141,725 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. அதிலும் 37,002 பெண்கள் தொழில் வாய்ப்புக்களைத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 கடந்த 2015ஆம் ஆண்டில், 73,226 பெண்களும், 2016 ஆம் ஆண்டில் 65,023 பெண்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.அந்த வகையில், இந்த வருடம் 37,002 பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொகை குறைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.\ இதில், வீட்டுத் தொழிலாளர்களைத் தவிர வேறு திறமையான தொழிலுக்காக 2015இல் 17,429 பெண்களும், 2016 இல் 17,495 பெண்களும் இலங்கையிலிருந்து சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை! 30,000 இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கில் Reviewed by Author on September 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.