கொள்கையில்லாத நாடுகளால் உலக அழிவு: அறிவியல் மேதை நியூட்டனின் பகீர் கணிப்பு
உலக முடிவு எப்போது என்பது குறித்த பகீர் கணிப்புகளை அறிவியல் மேதை சர் ஐசக் நியூட்டன் தமது குறிப்புகளில் பதிவு செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.<
அறிவியல் மேதை சர் ஐசக் நியூட்டன் தமது கணிப்புகளை 1704 ஆம் ஆண்டு காலகட்டத்தில் குறித்து வைத்துள்ளார்.
அதில் பெருமைக்குரிய ரோமை பேரரசு உருவாகி 1260 ஆண்டுகள் முடிவடையும் காலகட்டத்தில், அதாவது 2060 ஆம் ஆண்டு உலக முடிவு துவங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூட்டன் விவிலியத்தில் உள்ள தானியேல் தீர்க்கதரிசியின் வசனங்களை ஆராய்ந்து தமது கணிப்புகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் நியூட்டன் விவிலிய வசனங்களை ஆராய்ந்து எப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்பது 300 ஆண்டுகள் கடந்தும் மர்மமாகவே உள்ளது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நியூட்டனின் குறிப்பில், உலக முடிவு நெருங்கும் நிலையில் பல தீர்க்கதரிசிகளும் தங்களது கருத்துகளை உலக மக்களின் முன்பு வைப்பார்கள். ஆனால் அவர்களின் கணிப்புகள் அனைத்தும் தோல்வியில் முடியும்.மட்டுமின்றி, கொள்கை அற்ற தேசங்களால் அழிவு துவங்கும். உலக அழிவுக்கு முன்னர் யூதர்கள் தங்கள் அடிமை விலங்கை உடைத்து சொந்த தேசம் திரும்புவர்.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஆய்வாளர் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் நடந்தேறும் அனைத்து விடயங்களும் நியூட்டனின் கணிப்பை பிரதிபலிக்கின்றன என்றார்.
மேலும், சுமார் 50 ஆண்டுகாலம் ஆராய்ந்த கணிப்புகளை நியூட்டன் 4,500 பக்கங்களில் பதிவு செய்துள்ளார் எனவும், ஆனால் ஒரு முடிவுரையை எழுதாமல் விட்டுவிட்டார் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொள்கையில்லாத நாடுகளால் உலக அழிவு: அறிவியல் மேதை நியூட்டனின் பகீர் கணிப்பு
Reviewed by Author
on
October 15, 2017
Rating:

No comments:
Post a Comment