தமிழர் தாயக பிரதேசம் எங்கும் - விண்ணை அதிர வைக்கும் தாய்மாரின் கதறல்கள்! இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?
தமிழர் தாயக பிரதேசம் எங்கும் - விண்ணை அதிர வைக்கும் தாய்மாரின் கதறல்கள்! இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?
மட்டக்களப்பு
மட்டக்களப்பு நீதிமன்ற தடையினையும் மீறி பொலிஸாரின் தடையினையும் உடைத்து மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதன்போது, நீதிமன்ற தடையுத்தரவினை வாசித்துக் காட்டிய பொலிஸார் நீதிமன்ற தடையினை மீறி ஊர்வலம் சென்றால் கைதுசெய்யப்படுவார்கள் என எச்சரித்தனர்.
இங்கு கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணியை கைதுசெய்யும் முயற்சியை அங்குவந்திருந்த மக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.
விடுதலைப்புலிகள் மீள் எழுச்சி பெறுவார்கள் என்று கூறி தமது போராட்டத்திற்கு தடையுத்தரவு வாங்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளை அழித்ததாக மகிந்தராஜபகஷ கூறியுள்ள நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட கிழவிகள் சேர்ந்தா விடுதலைப் புலிகளை மீள அமைக்கப்போகின்றோம் என்று பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி த.செல்வராணி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம்
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற பேரணியை அடுத்து வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினாரால் மனித உரிமைகள் ஆணைகுழுவிற்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாடத்தில் கலதுகொண்டவர்கள், கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே? உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? சர்வதேச விசாரணை வேண்டும். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே? என கோசங்களை எழுப்பியவாறும் பேரணியில் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment