அண்மைய செய்திகள்

recent
-

தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று திரையரங்குகள் திறப்பு

கொரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டன. திரையரங்குகளைத் திறக்க 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. எனினும் VPF கட்டணத்தை இரத்து செய்யாவிட்டால், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதால், புதிய பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

 இதனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படங்களை மீண்டும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான இணையவழி முன்பதிவு சில திரையரங்குகளில் மட்டும் ஆரம்பமாகியுள்ளது. மேலும் திரையரங்குக்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 900 இற்;கும்; மேற்பட்ட திரையரங்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று திரையரங்குகள் திறப்பு Reviewed by Author on November 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.