அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள செய்தி

முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள தகவலின் படி தமது ஆளுகையின் கீழ் உள்ள 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட முத்தையன்கட்டு குளம் 23´ 9" அடியினை பெற்றுள்ளதாகவும் இன்று மதியத்தின் பின்னர் நிலைமைக்கு ஏற்ப வான்கதவுகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவே பண்டாரவன்னி. பேராறு. கனகரத்தினபுரம்.

 வசந்தபுரம். கெருடமடு. கற்சிலைமடு மூன்றாம் கண்டம். மன்னாகண்டல் மூன்றாம் கண்டம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள செய்தி Reviewed by Author on January 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.