மன்னாரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை
இந்த நிலையில் மக்களை உரிய சுகாதார நடை முறைகளை கடை பிடிக்குமாறு பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் தொடர்ச்சியாக வழியுறுத்தி வந்தனர்.
-இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக மன்னார் பொலிஸார் மேற்படி சுகாதார நடை முறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் , உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக முகக்க வசம் அணியாத வர்த்தகர்கள், கிருமி தொற்று நீக்கிகள் மற்று வடிக்கையாளர்கள் கைகழுவுவதற்கு ஒழுங்கான ஏற்பாடு மேற்கொள்ளாத வர்த்த நிலையங்கள் ஆகியவற்றின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் ஒரு சில வர்தகர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முக கவசங்களை சரியான முறையில் அணியாமல் நடமாடும் பொது மக்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
தொடர்சியாக மன்னார் பஸார் பகுதி மற்றும் ஏனைய இடங்களில் மக்கள் சுகாதார நடை முறைகளை பின்பற்றாது நடந்து கொள்ளும் விதம் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை
Reviewed by Author
on
January 16, 2021
Rating:

No comments:
Post a Comment