அண்மைய செய்திகள்

recent
-

ரயில் பொதிசேவை இன்று மீண்டும் ஆரம்பம்

ரயில் பொதிசேவை இன்று (07) மீண்டும் ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பிரீமா லங்கா தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை ரயில் மூலம் கொண்டுசெல்லும் சேவையும் இன்று ஆரம்பமாகிறது. இதற்காக சீதுவ பிரீமா லங்கா நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் இது தொடர்பான வைபவம் போக்குவதற்கு அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம ஆகியோர் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

 இதில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் ரயில்வே திணைக்கள பொது முகாமையார் எம்.யே.டிலான் பெர்னாண்டோ உள்ளிட்ட ரயில்வே திணைக்கள மற்றும் பிரிமா இலங்கை தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுக்கு அமைவாக 26 கொள்கலனுடனான விசேட ரயில் ஒன்று திருகோணமலை சீன துறைமுக ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வைபவம் நடைபெறும் இடத்தை வந்தடையும்.

 எவ்வாறேனும், அவசரமாக சேர்க்க வேண்டிய பொதிகள் மாத்திரம் கொண்டு செல்லப்படும். ரயில் சேவைகள் நடத்தப்படும் பிரதேசங்களுக்கு மாத்திரம் பொதிகளை அனுப்பி வைக்க முடியும். பழுதடையக்கூடிய பழ வகைகள், காய்கறிகள் போன்றவற்றை ரயில் நிலையங்களில் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் கஸூன் சாமர தெரிவித்தார்.

ரயில் பொதிசேவை இன்று மீண்டும் ஆரம்பம் Reviewed by Author on January 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.