துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னாரை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா வரவேற்கப்பட்டு கௌரவிப்பு.
 மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து குறித்த கௌரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
-இன்று சனிக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாலை அனுவித்து இசை வாத்தியத்துடன் ஊர்வலமாக துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வ தேச விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா அழைத்து வரப்பட்டார்.
 -அதனைத்தொடர்ந்து நகர மண்டபத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றது.பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டதோடு, சர்வ மத தலைவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம்,சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் திணைக்கள அதிகாரிகள் , மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பெண்கள் அமைப்பு என பலர் கலந்து கொண்டனர்.
துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னாரை சேர்ந்த சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா  வரவேற்கப்பட்டு கௌரவிப்பு.
 
        Reviewed by Author
        on 
        
April 17, 2021
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
April 17, 2021
 
        Rating: 








No comments:
Post a Comment