அண்மைய செய்திகள்

recent
-

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி?

தரமற்ற தேங்கா எண்ணையை இறக்குமதி செய்த 3 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ´கட்டான ரிபைனரிஸ்´ நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 3 நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்கா எண்ணையில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் என்ற இரசாயண பதார்த்தம் கலந்துள்ளதாக அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது குறித்து மேற்க்கொள்ளப்பட்ட இரண்டாவது தர நிர்ணய பரிசோதனையிலும் தேங்கா எண்ணையில் புற்று நோயை ஏற்படுத்த கூடிய இரசாயணம் கலந்துள்ளமை உறுதியானது. இவ்வாறான நிலையில் குறித்த தேங்கா எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத்திணைக்களம் சம்பந்தப்பபட்ட நிறுவனங்களுக்கு அறிவித்தது. 

 தற்போது இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை தொடர்பான பரிசோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில் கட்டானையில் உள்ள ´கட்டான ரிபைனரிஸ்´ நிறுவனத்திற்கு எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த வாரத்தில் எண்ணைய் மீள் ஏற்றுமதி செய்யப்படும் என சுங்க பணிணப்பாளர் தெரிவித்துள்ளளளார். இதேவேளை, இன்றைய தினம் மற்றுமொரு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்கா எண்ணைய் மாதிரிகள் தொடர்பான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி? Reviewed by Author on April 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.