கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் யாழ் பொலிஸ் நிலைய நீதிமன்ற பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய P.S குமாரசிங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணிநேரம் சடலம் வாய்க்கால் பகுதியில் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து வீதியால் பயணித்தவர்கள் பொலிசாருக்கு விபத்து இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல் வழங்கியதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் வீதி வளைவு காணப்படும் நிலையில் அதிக வேகம் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் அருகில் உள்ள நீர்பாசன வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாடை இழந்து குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
Reviewed by Author
on
June 27, 2021
Rating:

No comments:
Post a Comment