நெல்லை கண்ணன் காலமானார் - முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டு பரபரப்பு
நெல்லை கண்ணன் ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் கட்சியின் தீவிர பேச்சாளராக இருந்து வந்தார். குறிப்பாக அவர் காமராஜர் மீது அதிகப்பற்று கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
பெரும்பாலான மேடைகளில் அவர் காமராஜரை பற்றி பேசுவார். 1996ம் ஆண்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
அவர் மேடைகளில் பேசும்போது நெல்லை வழக்காடு மொழிக்கேற்ப தனது பேச்சில் அவன், இவன் என்ன சாதாரணமாக தான் பேசுவார். அதன் காரணமாகவே அவரது பேச்சு அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். மேலும் பொது மேடையில் சர்ச்சையாக பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.
குறிப்பாக கடந்த குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நெல்லையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்த காரணத்தால் 2020 ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
அதிமுகவிலும் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்திருந்தாலும் சமீபகாலமாக திமுகவுக்கு ஆதரவாகவே பொது மேடைகளில் பேசி வந்தார் சமீபத்தில், முதல்வரை சந்திக்க அனுமதிக்கவில்லை 79 வயது கிழவன் நொந்து போயுள்ளேன் இறந்து போகலாம் என நினைக்கிறேன் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவரது இல்லத்திற்கு ஏராளமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வருகை தந்து அவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
நெல்லை கண்ணன் காலமானார் - முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டு பரபரப்பு
Reviewed by Author
on
August 18, 2022
Rating:

No comments:
Post a Comment