மடு வீதி பிரதேச பகுதி சூழல் பாதுகாப்பு இளைஞர் குழு அமைப்பு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து கவனயீர்புப் போராட்டம்..
மடு றோட் பிரதேச பகுதியில் மக்கள் குறைவாக வசித்து வரும் நிலையில் குறித்த பிரதான பகுதி மடு திருத்தலத்திற்கு மற்றும் சுற்றுலா பயணிகளால் நாளாந்தம் சுமார் பல்லாயிரக் கணக்கானவர்கள் குறித்த இடத்தில் தரித்து நின்று குறிப்பாக உணவகம் தனியார் தங்கும் விடுதி சில வர்த்தக நிலையங்கள் இருப்பதன் காரணமாக சென்று வரும் நிலையில் அப்பகுதியில் நாளாந்தம் பெருமளவான கழிவு பொருட்கள் சேரும் நிலையிலேயே சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடு றோட் சந்தி மடுத்திருத்தள நுழைவாயில் பகுதியில் சுலோகங்களை ஏந்தியவாறு குறித்த பிரதேச பகுதியில் வாழும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நடைபவணியாக சென்று வீதி மருந்துகளில் அதிகமாக காணப்பட்ட கழிவு பொருட்களை அப்புறப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழல் மாசடைவதை தவிர்த்துக் கொள்ளும்படி அதிகாரிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப்புனர்வை ஏற்படுத்தும்வகையில் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் குடிநீர், மலசல கூடம், கழிவு பொருட்கள் சேகரிப்பு தொட்டிகள் என்பவற்றை நிறுவும்படி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மடு வீதி பிரதேச பகுதி சூழல் பாதுகாப்பு இளைஞர் குழு அமைப்பு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து கவனயீர்புப் போராட்டம்..
Reviewed by Author
on
August 20, 2022
Rating:

No comments:
Post a Comment