மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்திலும் இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.
இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் விசேடமாக துவா தொழுகையும் இடம் பெற்றது.மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விசேடமாக துவா தொழுகையும் இடம் பெற்றது.மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை
Reviewed by Author
on
June 17, 2024
Rating:
Reviewed by Author
on
June 17, 2024
Rating:

No comments:
Post a Comment