மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு!
மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஜீவபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு இன்றைய தினம் (5) சுஷி பண பரிமாற்ற நிறுவனத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாந்திபுரம்,ஜீவபுரம் கிராமம் முற்று முழுதாக பாதிக்கப்பட்ட நிலையில் மன்னார் பிரதேச செயலகத்துடன் இணைந்து சுஷி பண பரிமாற்று நிறுவனம் முதல் கட்டமாக 30 உலர் உணவு பொதிகளை சாந்திபுர கிராமத்தில் வழங்கியதற்கு மேலதிகமாக இன்று(5)மன்னார் பிரதேச செயலகத்தில் ஜீவ புரத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு வழங்கி வைத்துள்ளது.
குறிப்பாக வெள்ளத்தின் போது முகாம்களுக்கு செல்ல முடியாத நிலையில் வீடுகளில் இன்னல்களுக்கு மத்தியில் வசித்த குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, சோயா, உள்ளடங்களாக அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் - ,எமில் நகர் கிராம சேவகர், சுஷி நிறுவனத்தின் பங்குதாரர்கள் இணைந்து குறித்த உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.
Reviewed by Author
on
December 05, 2024
Rating:
.jpg)
%20(1).jpeg)




No comments:
Post a Comment