ஆசியாவில் புதிய கொரோனா வைரஸ் ; வேகமாக பரவி வருவதாக தகவல்
ஆசியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தகவல் தெரிவிக்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 ஆண்டுகளுக்கு 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உயிர் மற்றும் பொருள் இழப்புகளை ஏற்படுத்தியது. வரலாறு காணாத அளவுக்கு சுமார் 20 மாதங்களுக்கு உலகில் பல்வேறு தொழில்கள் முடங்கின.
ஆசியாவில் புதிய கொரோனா வைரஸ் ; வேகமாக பரவி வருவதாக தகவல் | New Coronavirus In Asia Spreading Rapidly
கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மீண்டுள்ள நிலையில், அதிர்ச்சி தரும் விஷயமாக ஆசியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. திடீரென்று பாதிப்பு உயர்ந்திருப்பதால் சுகாதாரத்துறை நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 28% அதிகரித்து 14 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் ஆசிய அளவில் கொரோனா அலை புதிதாக வீசும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், சிங்கப்பூரில் இந்த கொரோனா தொற்று பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அதேவேளை புதிய தொற்று சீனாவுக்கும் பரவக் கூடும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் கருதுவதால், அங்கு தடுப்பு நடவடிக்கையில் சீன அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

No comments:
Post a Comment