தயவுசெய்து அவதானத்துடன் இருக்கவும் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனமழை குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவயில் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இவ்வாறு கனமழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை நிலைமை நாடு முழுவதும் படிப்படியாக நிலைப்பெற்று வருகிறது.
இதன் தாக்கத்தால், நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை இன்று (19) மற்றும் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமாகாணங்களுக்கும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தயவுசெய்து அவதானத்துடன் இருக்கவும் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
May 19, 2025
Rating:

No comments:
Post a Comment