மன்னாரில் பலத்த காற்றுடன் கடும் மழை- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு-கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்
-மன்னாரில் இன்று (17) சனிக்கிழமை காலை வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி அளவில் கடும் காற்று வீசியதுடன் மழையும் பெய்தது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில மணி நேரம் இ மின்தடை ஏற்பட்ட நிலையில் பின்னர் மின்சாரம் வழமைக்கு திரும்பியது.
-மேலும் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மன்னார் பேசாலை கிராம மீனவர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
இன்றைய தினம் (17) காலை கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.
மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட டோலர் படகுகள் மற்றும் கண்ணாடி இழை படகுகள் காற்றில் சிக்கிய நிலையில் கரையில் ஒதுக்கப்பட்டது.
இதனால் படகுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.அதே வேளை பலத்த காற்று காரணமாக பேசாலை கடற்கரையில் காணப்பட்ட மீனவர்களின் மீன் வாடிகள் சேதமடைந்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீர் தேங்கியுள்ளது டன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் சிறிது பாதிக்கப்பட்டுள்ளது
Reviewed by Vijithan
on
May 17, 2025
Rating:

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment