மன்னார் பேசாலையில் மாற்றுத் திறனாளிகளின் சுய உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் விக்டரி உற்பத்தி நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
மாற்றுத் திறனாளிகளின் சுய உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்து விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் (UK) நிதி உதவியுடன் மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட மன்னார் விக்டரி உற்பத்தி நிலையம் இன்று புதன்கிழமை (21) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு குறித்த நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை சஞ்சுவம் சத்தியராஜ்,மன்னார் நலன்புரி அமைப்பு ஐக்கியராச்சியத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் ,வடமாகாண சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை பத்திநாதன்,வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன்,மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தர்ம ராஜன் வினோதன், மன்னார் நலன்புரி அமைப்பு ஐக்கியராச்சியத்தின் பொருளாளர் தேவசகாயம் கில்மன்,பேசாலை புனித வெற்றி நாயகி மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் மதிவளன் பெணாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வருகை தந்த விருந்தினர்கள் குறித்த உற்பத்தி நிலையத்தில் முன்னெடுக்கப்படும் உற்பத்திகள் குறித்த கலந்துரையாடியதுடன்,உற்பத்திப் பொருட்களையும் பார்வையிட்டனர்

No comments:
Post a Comment