அறிமுகமாகிறது iPhone 17
ஆப்பிள் நிறுவனம் இன்று (10) நடைபெற்ற வருடாந்திர நிகழ்வில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டு உள்ளன. ஐபோன் 17 (iPhone 17) சீரிஸில் மொத்தம் நான்கு மாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த மாடல் போன்கள் எப்போது முதல் கிடைக்கும்? இந்தியாவில் அதன் விலை என்ன? என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்கள் என பல்வேறு கேட்ஜெட்களை தயாரித்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கென்று செல்போன் சந்தையில் தனி மவுசு உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்த ஆப்பிள் நிறுவனம் வருடந்தோறும் செப்டெம்பர் மாதம் வருடாந்திர நிகழ்வை நடத்தும். அந்த வகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது புதிய மாடல் ஐபோன் 17 சீரிஸ் மாடலை வெளியிட்டுள்ளது.
கலிஃபோர்னியாவின் குப்பர்டினோ நகரில் உள்ள ஆப்பிள் பார்க்கில் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஐபோன் சீரிஸ்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
ஐபோன் சீரிஸ்களில் இந்த முறை 4 மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஐபோன் 17 ப்ரோவின் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் $1,099 விலையில் (333,451 இலங்கை மதிப்பில்) ஆரம்பமாகிறது, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி மாடலின் ஆரம்ப விலை (363,792 இலங்கை மதிப்பில்) விலையிலும் கிடைக்கின்றன.
இந்த போன்கள் காஸ்மிக் ஆரஞ்சு, டீப் ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஐபோன் 17 ப்ரோ மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் உலகளவில் விற்பனைக்கு வரும். ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் அலுமினிய வடிவமைப்பிற்குத் திரும்பியுள்ளன. இதன் மூலம், ஐபோன் 15 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மாடல்களில் காணப்பட்ட டைட்டானியம் இந்த ஆண்டு மாடல்களில் இல்லை.
ஐபோன் 17 மாடலின் ஆரம்ப விலை $ 940 விலையில் (285,393 இலங்கை மதிப்பில்) இருந்து கிடைக்கிறது, 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் இந்த விலையில் கிடைக்கிறது.
அதேவேளையில், புதிய ஐபோன் ஏர் மாடல் $ 1,360 விலையில் (412,704 இலங்கை மதிப்பில்) கிடைக்கிறது. இதுவும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டதாகும்.
ஐபோன் 17 ப்ரோ மாடலை பொறுத்தவரை, இது 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி வேரியன்ட் ஆகிய மூன்று வகையான ஸ்டோரேஜ் வசதிகளுடன் கிடைக்கிறது.
முக்கியமான வசதிகள் என்று பார்த்தால் ஐபோன் ஏர் மாடலில் வயர்லாஸ் மேக்சேஃப் சார்ஜிங் வசதி மற்றும் நீடித்த பேட்டரி லைஃப் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐபோன் 17 மாடலில் மெயின் கேமரா 48 மெக பிக்ஷல் அல்ட்ரா வெய்டு மற்றும் 12 மெகா பிக்ஷல் மேக்ரா கேமரா வசதிகளுடன் வந்துள்ளது.
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில், ஃபோனின் முழு அகலத்திற்கும் பரவும் வகையில் புதிய கேமரா வடிவமைப்பு இடம்பெறும்.
48 மெகாபிக்சல் கேமராவில் 1x, 2x, 4x, மற்றும் 8x ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கும். மேலும், இது 8K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது.
இந்த இரண்டு ப்ரீமியம் மாடல்களிலும் அதிவேக இணைப்பு வசதிக்காக, ஆப்பிள் வடிவமைத்த வைஃபை 7 சிப் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் பிரகாசமான டிஸ்ப்ளேக்களைக் கொண்டிருக்கும் என்றும், 39 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக் ஆதரவை வழங்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபோன் 17 ஏர் மாடல் 5.6 மில்லிமீட்டர் தடிமன் கொண்டது. இது ஐபோன் 16 ப்ரோ மாடலை விட சுமார் மூன்றில் ஒரு பங்கு மெல்லியதாக உள்ளது. இதன் எடை 165 கிராம் ஆகும். இந்த புதிய ஐபோனில் 6.6 இன்ச் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
இது இலகுரக டைட்டானியம்-அலுமினியம் பிரேமால் சூழப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரேம் செராமிக் ஷீல்ட் 2 ஆல் பாதுகாக்கப்படும்
விலை குறைவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஐபோன் 17 மாடல் போன் வாங்கலாம். மிகவும் மெல்லிய வடிவில், டைட்டானியம் மாடல் போன்களை அதிகம் விரும்புவர்கள் ஐபோன் ஏர் மாடல் வாங்கலாம்.
ஐபோன் 17 மாடலை பொறுத்தவரை டிஜிட்டல் கிரியேட்டர்கள், கேமிங்கில் ஆர்வம் கொண்டவர்களுக்கு கனகச்சிதமாக இருக்கும். சிறந்த பெர்மார்மன்ஸ் மற்றும் கேமரா இந்த மாடலில் உள்ளது
ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடலை பொறுத்தவரை அல்டிமேட் மாடலாக உள்ளது. அகண்ட ஸ்க்ரீன், நீண்ட தொலைவுக்கு ஜூம் செய்யும் வசதி கொண்ட லென்ஸ்கள், 2 டிபி ஸ்டோரோஜ் வசதி உள்ளது.
ஆப்பிளின் ஐபோன் 17 வரிசை வெவ்வேறு கலர்களில் வெளிவரவுள்ளது. ஐபோன் 17 மாடல் கருப்பு, வெள்ளை, ஸ்டீல் கிரே, லைட் ப்ளூ, பச்சை மற்றும் ஊதா ஆகிய நிறங்களில் கிடைக்கும்.
ஐபோன் 17 ஏர் மாடல் கருப்பு, வெள்ளை, லைட் கோல்ட் மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த வண்ணங்கள் பயனர்களுக்குப் புதிய அனுபவத்தை வழங்கும், அதேபோல், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் நீலம், ஆரஞ்சு மற்றும் சில்வர் ஆகிய மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வெளியாகவுள்ளன.

No comments:
Post a Comment