மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது!
பாமர மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறுப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரவு செலவு திட்டமாக இதை பார்க்கலாம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக பல போராட்டங்களை நடாத்திய கட்சியாக நாங்கள் இருக்கிறோம். வரவு செலவு திட்டத்தில் மலையக மகிழ்ச்சி என்றே கூறலாம்.
உண்மையில் மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது, வேதனம் உயர்த்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட கம்பனிகளுடன் உடனான நீண்ட பேச்சுவார்த்தை மூலம் இறுதியாக வெற்றி பெற்று இருக்கிறோம் என தெரிவித்தார்.
மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது!
Reviewed by Vijithan
on
November 09, 2025
Rating:
Reviewed by Vijithan
on
November 09, 2025
Rating:


No comments:
Post a Comment