மடுக்கல்வி வலயத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ஸ்ரனிஸ் – கல்வி அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து கவலை!
மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட மடுக்கல்வி வலயம் தற்போது கல்வித் துறையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த வலயத்தின் கல்வி முகாமைத்துவ பிரதி கல்வி பணிப்பாளர் திரு. ஸ்ரனிஸ் அவர்களின் சமீகாலத்தில் நடந்து கொண்ட செயற்பாடுகள் காரணமாக, பல பாடசாலைகளில் மத அடிப்படையிலான குழப்பங்கள் மற்றும் அமைதியின்மை நிலை உருவாகியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல கல்வி வட்டாரங்களின் தகவலின்படி, சில பாடசாலைகளில் அதிபர்கள் தங்களது கடமைகளை சுதந்திரமாகவும் நியாயமாகவும் மேற்கொள்ள முயற்சிக்கும் போது,
அவர்களுக்கு எதிராக திரு. ஸ்ரனிஸ் வெளிப்படையான எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மதத் தலைவரை பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டங்களில் கொண்டு வரவேண்டும் என்பதில் குறிக்கோலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
இதனால் கல்வி சூழலில் அச்சமும் குழப்பமும் நிலவுவதாகவும், மாணவர்களின் நலனை விட தனிப்பட்ட எண்ணங்கள் மேலோங்குகின்றனவெனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முன்பு அதே பதவியில் பணியாற்றிய அதிகாரிகள் சிறப்பாகவும், சமநிலையுடனும், மத வேறுபாடின்றி பணிகளை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த நம்பிக்கைக்குரிய பணிமுறைகளுக்கு எதிராக தற்போதைய செயல்பாடுகள் போகின்றனவென கல்வித் துறையினர் கூறுகின்றனர்.
சமூகத்தின் பல தரப்பினரும், கல்வித் துறையின் நலனுக்காகவும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும்,
இந்த நிலைமையை விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விபரம் விரைவில்..

No comments:
Post a Comment